தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
பாடல்வரிகள்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ..!
கொஞ்சம் நில்லு ...!!
அண்ணல் திரு நபி.. இடம் போய் சொல்லு ..! எங்கள்
ஸலாம் சொல்லு ,,,!!
சன்மார்க்கம் தந்த நபி ..துன் மார்க்கம் வென்ற நபி ...
சாத்மீக மெய்ஞான பெருமான் ..!
கண்ணோடு கண்ணாகி கல்புக்குல் நிறைவாகி
கருணைக்கு பொருள் தந்த எம்மான் ..!!
அண்ணலை காணத்துடிக்கின்றேன் இந்நாள் ..!
காணத்துடிக்கின்றோம் இந்நாள் ...!!
மடமையாம் இருள் போக்கி ..மதுவையும் விஷமாக்கி
மாந்தரின் நலம் காத்த பெருமான் ...!
மண்ணோடு பெண் மகவை மகிழ்வோடு புதைத்திட்ட
மா பாதக செயல் தடுத்த எம்மான்...!
அந்த மஹ்மூதரை காண்பது ..என் நாள் ..!!
கடல் ,காடு ,மலை ,பாலை ,கடக்கின்ற இறைவேதம்
கனி வாயில் மொழிந்தருளிட்ட எம்மான் ...!!
கடல் போன்ற பகைமுன்னே உடைவாளை கரம் ஏந்தி
படை கொண்டு பகை வென்ற பெருமான் ..!!
பத்ரு''படையரசர் முகம் காண்ப தென் நாள் ..!!
எந்நாளும்.... இறை இல்ல பாங்கோசையில் அண்ணலின் நாமம் இயம்பாத கணம் ஏது ....!
திரு நாமம் செவியுற்று ,கை நகம் கண்தொட்டு கனிகின்ற ஸலவாத்தின் கஸ்தூரி மனம் கமழும் எம்மான் ..!
அண்ணலின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள் ..!!
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ..!
கொஞ்சம் நில்லு ...!
அண்ணல் திரு நபி இடம் போய் சொல்லு...!!
எங்கள் அன்பு ஸலாம் சொல்லு ....!!
*எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நம் உயிரினும் மேலான கண்மணி
காத்தமுன் நபி முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ
ஸல்லம் அன்னவர்களின்,,,
ஷஃபாஅத்திற்கு உரியவர்களாகும் பாக்கியத்தை நஷீபாக்கி நல்குவானாகவும்...!!
ஆமீன்,,யா ரப்பில் ஆலமீன்.!
ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்
(பாடல்; ஹாஜி நாகூர் E.M ஹனீபா அன்னவர்கள்)
No comments:
Post a Comment