அண்ணல் உங்கள் அன்பை நாடி
எந்தன் உள்ளம் ஏங்குதே
அமீனே ஹபீபே உமை மனம் தேடுதே..( slow)
அண்ணல் உங்கள் அன்பை நாடி
எந்தன் உள்ளம் ஏங்குதே
அமீனே ஹபீபே உமை மனம் தேடுதே..(அண்ணல்)
தென்றல் வீசும் மதினா நான் காணுவேனா(தென்றல்)
பணிவோடு ரவ்ளா முன்னால் நான் நிற்பேனா
எண்ணி எண்ணி ஏங்கினேன்
இறையிடம் வேண்டினேன் (எண்ணி)
நபியெ உம்மை காணும் நாளை எதிர்பார்கிறேன். (அண்ணல்)
மிம்பர்படி கூட, உம் நினைவில் அழுதே
எந்தன் உள்ளம் கல்லாய் இன்னும் கண்ணீர் வரவில்லையே (எந்தன்)(slow)
மக்கம் கண்ட நபியே யாநபி யாநபி யாநபி யாநபி
நபியின் முகமதிலே அகிலமும் அடங்கிடும்
அதை ஒருநொடி காண எந்தன் உயிர் துடித்திடும்
உயிரெனும் கூட்டினிலே உயிர் உமை தேடிடுமே
உமை காண வரம் வேண்டுமே
கனாவில் காண வேண்டுமே
என் ஆசை தீர வேண்டுமே (கனாவில்)
மிம்பர்படி கூட உம் நினைவில் அழுதே
எந்தன் உள்ளம் கல்லாய் இன்னும் கண்ணீர் வரவில்லையே
மக்கம் கண்ட நபியே உம்மை மனம் காண ஏங்குதே (மக்கம்)
உயிர்போகும் முன்னே உம்மை நான் காண வேண்டுமே (அண்ணல்)
உந்தன் விரல் அசைவில் நிலவை பிளந்தீர்(உந்தன்)
இருவிரல் இடையே நீர் பொங்க செய்தீர்
மனகமழும் கஸ்தூரிவாசம் மேனி எங்கும் வீசுதே( மனம்)
நீ சென்ற பாதையெல்லாம் மேகம் குடை ஆனதே (அண்ணல் (2))
சர்தாரே ஆலம்
இருலோக சர்தார்
கண்ணான அஹமது
பொன்னான முஹம்மது
கருத்திலே ஹாமீது
கல்பீலே மஹ்முத்
மக்கத்து கோமான்
மதீனத்து சீமான்
யாரசூலுல்லாஹ்
யாஹபீபல்லாஹ்
யாஷஃபியல்லாஹ்
அந்த ரசூலுல்லாஹ் (2)
நபி.... யாநபி... யாநபி..யா...நபி
No comments:
Post a Comment